வாழ்வியல் கதைகள்
சின்னகண்ணன் சிரிக்கிறான்.
தேவகியின் மைந்தனாக அவதரித்து
பூமியில்
தீயசக்தி அழிவதற்கு
மழலையுறு எடுத்தவன்
மூவலகின் தேவனான நாரணனின்
உருவென
மூதறிவு ஞானிகளும்
மொழிந்தனரே கதைகளாய்
பூவுலகில் அசுரனாக உழன்றுவந்த
கம்சனும்
பந்தபாசம் விடுத்துதன்
சுயநலமே பெரிதென
சேவகரின் காவலிலே சோதரியை
வைத்தவன்
சேயெட்டு பிறந்ததுமே
கொல்லஆணை யிட்டனன்.
மகவேழு பிறந்ததுமே தானேகொன்று
மகிழ்ந்தனன்
எட்டாவது மகவைவசு
தேவர்தூக்கிச் சென்றதும்
தகவுடனே மாயாதேவி அவ்விடத்தே
இருக்கவும்
தயையில்லாக் கம்சனதைக்
கொல்லவுமே தூக்கவும்
நகையொலிக்க மாயாதேவி வானில்சென்று
மறையவும்
நடுக்கமுற்ற மாமன்மேலும்
பயத்தால் கோபமுற்றனன்.
மகன்மருகன் கண்ணனாக கோகுலத்தில்
இருக்கிறான்
மாண்டிடுவாய் அவனாலென
அசரீரியும் ஒலித்தது.
கண்ணனவன் அவதரித்த கதையிதுவே
அறிகிறோம்
கருத்திலேற்றி நாமவனை
நாள்தோறும் தொழுகிறோம்
மன்னனவன் மழலையாக நம்மனத்தை
யாள்கிறான்
மாயனாக ஜாலங்கள்
பலப்பலவே புரிகிறான்
கன்னத்தோடு கன்னம்வைத்துக் கோபியரைக்
கொஞ்சினான்
கருங்குழலில் மலரைசூட்டி
மாயமாக மறைந்தவன்
சின்னபல ஜடையிழுத்து சேட்டைபல
பண்ணினான்
சிணுங்கலாக அவர்களிடம்
குறும்புபல செய்தவன்.
ஆயர்குல மாந்தரிடம் வெண்ணைதிருடித்
தின்றவன்
அவர்கள்கோபம் கொள்கையிலே
வலியமுத்தம் பொழிந்தவன்
மேயவரும் ஆவினத்தை குழலிசையால்
மயக்கினான்
மாயனவன் நண்பருடன்
வெண்ணைதிருடித் தின்றவன்.
சேயவனை யசோதையவள் உரலில்கட்டி
வைத்ததும்
செய்வதறி யாதவன்போல்
செயலிழந்து கெஞ்சியே
தாயவளும் கட்டிவிட்டு கதவடைத்துச்
சென்றதும்
தானிருக்க, மாயுருவாய்
கோகுலத்தில் சுற்றினான்.
சின்னபிள்ளை அரக்கர்களைப் பயமின்றிக்
கொன்றவன்
சீற்றமேதும் காட்டாது
சிரித்தபடி அனைத்தையும்
வண்ணமுற தன்பணியை இனிதேநிறை
வேற்றினான்
வாய்நிறைய மண்ணையுண்டு
மண்டலத்தையும் காட்டினான்
கண்ணனவன் லீலைகளை நவின்றுகொண்டே
இருக்கலாம்
காந்தசக்தி அவன்சிரிப்பு
அகிலத்தையே ஆள்கையில்
சின்னகண்ணன் சிரிப்பினிலே கவலையாவும்
தீருமே
சிரித்துசிரித்து மயக்குகையில்
குவலயமே உறையுமே.
இன்றுலகில் எத்தனையோ கம்சர்களும்
இருக்கிறார்
இதயமதை மறைத்துவைத்து
ஏமாற்றங்கள் புரிகிறார்
வென்றவரை மாய்த்துமக்கள் வேதனையைப்
போக்கவும்
விவேகங்கள் மக்களிடம்
வேகமாக வளரவும்
மன்றங்களில் ஒலிக்கின்ற மாய்மால
வார்த்தைகள்
மாயமாக மறைந்து
மாண்புடையோர் தோன்றவும்
பண்புபாசம் ஆசையன்பு மனிதநேயம்
வளரவும்
புண்ணியனாம் கண்ணனவன்
கருணையென்றும் வேண்டுமே.
கண்ணனவன் சிரிப்புகளைநம் மழலைகளில்
காண்கிறோம்
சின்னகண்ணன் இவனென்று
போற்றிபோற்றி புகழ்கிறோம்
கண்ணனைப்போல் கபடனாக இருக்கவேண்டாம்,
ஆகிலும்
கருத்துள்ள நல்லோனாக
வாழவேண்டும் உலகிலே
பன்னலமும் பெற்றுலகில் புகழுடனே
வாழவும்
பதவியாசை இல்லாதுதன்
திறமையினால் வளரவும்
முன்னவனாய் சபையினிலே புகழ்படவே
நிற்கவும்
மூலனான கண்ணனைநாம்
தொழுதென்றும் வணங்குவோம்.!
அணிந்துரை
தெய்வத்தமிழ்மணி, அபிநவபாரதி, கவிமாமணி
மயன்
கற்பனையும்
சந்தமும் கருத்தினை ஈர்க்கும்படி,
அற்புதமான கவிதைகளைப் புனையும் விற்பன்னராக விளங்கும் கவிமாமணி பாரதி எழிலவன்
சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும்,
அருமையான நாவல்களைப் படைத்தளிக்கும் அற்புத நாவலாசிரியராகவும் விளங்க்குவதை
தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும்.
ஆதனூரான் என்ற பெயரால்,
வாசமலர்கள், உயிரில்
கலந்த உறவு, கடமை
கண்ணியம் காதல் போன்ற நாவல்கள் வாசகர்களின் பேராதரவைப் பெற்ற நாவல்களின் வரிசையில்
உருவாகி வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு வாழ்வியல் கதைகள் என்ற இந்த
அற்புதப்படைப்பாகும். சமூகப் பிரச்சினைகளுக்கு அச்சுவடிவம் கொடுத்து
அரங்கேறியிருக்கும் அரிய புத்தகமாகும்.
தமிழகத்திலே
கவிதைக்கும், இலக்கியத்துக்கும்
அதிக முக்கியத் துவம் கொடுத்து,
அறுநூறுக்கும் மேற்பட்ட கவியரங்குகளைத் தொய்வின்றி நடத்தி, சாதனை
படைத்துவரும், சொல்லின்
செல்வர் பாரதி சுராஜ் தலைமையில் நடைபெறும் பாரதி கலைக்கழத்தின் கவிமாமணி
விருதுபெற்ற கவிஞர்களுள் ஒருவராகித் தனிப்பெருமை பெற்றவர். இவர் படைத்த
எழில்மலர்கள், எழில்
ஓவிங்கள், கவிதைப்பூங்கா
எனும் கவிதை நூல்கள் கவிஞர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றவையாகும். பாரதி
எழிலவனின்(ஆதனூரான் என்ற புனைப்பெயரால்) சிறுகதைத்தொகுப்பான, கவரிமான்
பல்லோராலும் பாராட்டப்பெற்று,
அவருக்குப் பெருமையையும் புகழையும் தேடித்தந்துள்ளதை இங்கு குறிப்பிடுதல்
முக்கியமாகும்.
ஆதனூரான்,
அருமைக் கவிஞரான கவிமாமணி பாரதி எழிலவன் படைத்துள்ள இந்த வாழ்வியல் கதைகளுள், முதல்கதை, தொணதொணப்பு. அலுவலகம் சென்று வந்தபின் இல்லத்திலும்
பணியாற்றவேண்டிய
பொறுப்புமிக்க மறுமகளாக விளங்கும் கல்யாணி,
தனது சிறுவயதில், தனது தாய்
கூறய குடும்ப வேலைகளைத் தவிர்த்து,
விளையாட்டுப் பெண்ணாக வளர்ந்ததால்,
புகுந்த வீட்டில்படும் அல்லல் களை சுவைபட சித்தரிக்கிறது. பிறந்த வீட்டில், வாசலுக்கு சாணம் தெளித்து கொலமிடச் சொல்லும் தாயின்
சொற்களைப் பொருட்படுத்தாமல் இருந்ததையும்,
காபி டிகாஷன் இறக்கும் முறையை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் பட்ட அவஸ்த்தையையும்
உணர்ந்து, தனது
அறியாமைக்கும், புறக்கணிப்பிற்கும், சரியான பதிலடியாக, தற்போது அவைகளை புக்கஹத்தில் செய்யவேண்டிய கட்டாயத்தை நினைத்து வருந்தும்
நிலையை வெகு அழகாக ஆசிரியர் வர்ணித்துள்ளது பாராட்டும்படி அமைந்துள்ளது. அவளது
மாமியார், அவளது
அறியாமையைப் புரிந்துகொண்டு,
அவள் செய்த தவறுகளையெல்லாம் பொருள் படுத்தாது, அவற்றைச் சரிசெய்த மாமியார், பிறந்த வீட்டில்,
தாயார் குடும்ப வேலைகளைக் கற்றுக் கொடுக்காமல், பெண்களை வளர்க்கும் அவல நிலையைத் தனக்குள்ளே புலம்புவதை -
தொண தொணப்பை- ஒவ்வொருவரும் படித்து
ரசிப்பது சுவாரஸ்யமாகும். புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும், அவர்களது
தாய்மார்களுக்கும் அருமையான புத்திமதியாக இக்கதை விளங்குகிறது. சிறப்பாக
நிகழ்ச்சியை விவரித்திருக்கும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
இரண்டாவது
கதையான யதார்த்தம், இளவயதில் ஏற்படும்
இனக் கவர்ச்சியினால், நளினி, ரமேஷ் அடைந்த
தொல்லைகளும், ராமகிருஷ்ணனைத்
திருமணம் செய்துகொண்டபின்,
வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொண்ட செய்திகளை விளக்கும் அருமையான கதையாகும்.
பணம் மட்டும் வாழ்க்கையில்லை,
பணம் இருந்தால் எதையும் சுலபமாக சாதிக்க முடியும், என்ற பணம்
படைத்தவர்களின் எண்ணத்திற்கு சரியான பாடமாக இக்கதை விளங்குகிறது.
நாராயணன்-ஜானகி
என்ற வயதான தம்பதிகளின் மனக்குமு ரல்களும் ,
சிறுவயதில் மகன்களின் திருமணத்தில் கோபப்பட்டு
நடந்து கொண்டதால், அவர்கள் தனியாகச்
சென்று குடும்பம் நடத்தும் நிலையையும்,
பேரன், பேத்திகளிடம், தமது அன்பையோ
பாசத்தையோ காட்டமுடியாமல் தவித்ததையும்,
கடைசிக் காலத்தில் சேரும்போது,
எந்த ஒரு பாசத்தையும் அனுபவிக்காமல் மறைந்து போனதையும், தன்சினம்
தன்னைச்சுடும் கதையில் எடுத்துக் காட்டும் ஆசிரியர் ஆதனூரான், இந்த நிகழ்வுகளை
அருமையாகப் படம்பிடித் திருப்பதைப் படித்துத்தான் ரசிக்கவேண்டும்.
அளவுக்குமேல் ஆசைப்பட்டு, கவுரவம்
என்ற பெயரால் ஊதாரித் தனமாகச் செலவு செய்த, வசுந்தரா-சுந்தரேசன்
வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும், நிகழ்வுகளும், சமூகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருந்தும்; வருமுன்னர் காவாதான் வாழ்க்கை,
``எரிமுன்னர் வைத்தூரு போலக்கெடும்.” என்ற
வள்ளுவன் குறளுக்கு விளக்கமளிப்பதாக உள்ளது.
அவசியம் ஒவ்வொருவரும் படித்து உணர வேண்டிய
அருமையான கதை.
மனம் சொல்லும் மாற்றங்கள் ஒரு
அற்புதமான படைப்பு. குருஷ்ண சாமியும் நாராயணனும் வயது முதிர்ந்த நண்பர்கள். அவர்களின் சம்பாஷனைமூலம் கடந்தகால நிகழ்வுகளை
அசை போடுவதுபோல கதை அமைந்துள்ளது. கிருஷ்ணசாமி தான் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள
நடந்துகொண்ட விதத்தால், மனம் வருந்துவதாகவும், நாராயணன், நீ மட்டுமல்ல, அனைவரும்
பழையகாலத்தில் நடந்த செயல்களால்
பாதிப்படையக்கூடும் என்ற நிலையை விளக்கி, தனது வாழ்வில்
நடந்த சம்பவங்கள் தன்னை எப்படிப் பாதித்துள்ளது, இப்பொழுது
தாம் எப்படி இருக்கிறார் என்ற உண்மைகளை எடுத்துச் சொல்லும்போது, கிருஷ்ணசாமி வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்து கொள்வதாக கதை நகர்கிறது.
வாழ்வில் அந்தந்த காலத்தில் நடந்தவற்றை, சுலபமாக
எடுத்துக்கொண்டு, வயதான காலத்தில் குழம்பாமல்
இருக்கவேண்டுமென்ற உண்மையைப் போதிப்பதாக இக்கதை இருக்கிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் புதைந்துகிடக்கும்,
உண்மைகளை உணர்ந்து, அதற்காக வருந்தாமல் இருக்க
வேண்டும் என்ற போதனையை வெளிப் படுத்துகிறது. அவசியம் படிக்கவேண்டியது இக்கதை.
பாசப்புலம்பல் என்ற சிறுகதை, ஐயங்கார்
பெண்ணும் முஸ்லிம் இளைஞனும் கலப்புத் திருமணம் செய்துகொண்டபின், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின், அவர்களது
மகனுக்குத் திருமணம் நடக்கும் போது, தனது பழைய நினைவுகளை
அசைபோட்டு, தன் உற்றார் உறவினர்களும், தாய்
தந்தையும் தன்மகனது திருமணத்திற்கு வந்து கலந்துகொள்ள முடியாத நிலையில் தாம் இருக்கிறோமே
தாம் செய்த கலப்பு மணத்தினால் தானே, நாம் எல்லா
சுற்றங்களையும் இழந்து தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்று மனம் வருந்தும்
சம்பவங்கள் சுவையாக விவரிக்கப்பட்டு இருக்கிறது. கலப்புத் திருமணம் செய்துகொள் பவர்களுக்கு
உபயோகமான கதையாகும் இது.
அறுவடைகாலம் நல்லதொரு
கும்பக்கதையாகும். நல்ல குடும்பத்தில் திருமணமான ஜனனிக்கு, அவளது தாயார் தனது
தோழியின் சொல்லைக் கேட்டு,
பெண்ணைத் தனிக்குடித்தனம் செய்யும்படி
தூண்டும் நிகழ்ச்சிகள் இடம்பெறும் ஒரு அருமையான கதையாகும். கடைசியில் அவர்கள்
திருந்தி, ஜனனியின்
புகுந்த வீட்டின் பெருமைகளை அறிந்துகொண்டு தங்கள் தவறை உணர்ந்து ஒன்று சேரும்
சூழ்நிலை நன்றாக விவா¢க்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு புது தம்பதியும் பெற்றோரும் படித்துத் தெரிந்துகொள்ளும் சம்பவங்கள் பல
இக்கதையில் உள்ளன.
வாழ்வியல் கதைகள் என்ற இச்சிறுகதைத் தொகுப்பு, சமூக அவலங்களைச்
சித்தரிப்பதோடு, அவைகளிலிருந்து
மீட்டுவரும் நிலையையும் எடுத்துச் சொல்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய
அருமையான சிறுகதை நூல் வாழ்வியல் கதைகளாகும். பாரதி எழிலவன், தான் ஒரு
அற்புதமான எழுத்தாளர் என்பதை வாழ்வியல் கதைகள்மூலம் நிரூபித்துள்ளார். மேலும் அவர்,
பல அரிய நூல்களைப் படைத்து தமிழுக்குத் தொண்டு செய்யவேண்டுமென்றும், அதற்கான உடல்
வலிவையும், நீண்ட ஆயுளையும்
தரவேண்டுமென்றும் அன்னை மஹா சக்தியைப் ப்ரார்த்திக்கிறேன்.
அன்புடன்
கவிமாமணி மயன்
1/301,மஹாகவி பாரதியார்
தெரு,
M.G.நகர் - 9 வது வி¡¢வு,
ஆதனூர் - 603 202.
மாடம்பாக்கம்
அஞ்சல்
கூடுவாஞ்சேரி - வழி.
கைபேசி: 9941502895
ஆதனூரான்
பேசுகிறேன்.
அன்பார்ந்த வாசகப்பெருமக்களுக்கு ஆதனூரானின் இனிய அன்பு வணக்கங்கள்.
இப்பொழுது எனது படைப்பில் அடுத்ததோர் இனிய சிறுகதைத் தொகுப்பு உங்களது கைகளில்
தவழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்பு வாழ்வியல் கதைகள் என்னும் பெயர் தாங்கி
பவனி வருகிறது. இதை அச்சிட்டுக் கொடுத்த அச்சகத்தாருக்கும், அணிந்துரை
அளித்த கவிமாமணி மயன் அவர்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
இந்த சிறுகதைத் தொகுப்பில், மொத்தம் ஏழு சிறுகதைகள்
இருக்கின்றன. அனைத்தும் நமது அன்றாட வாழ்வில் நடந்து வருகின்ற வாழ்க்கைச்
சம்பவங்களாகும். நமது சமுதாயத்தில் நாம் எத்தனையோ வகை மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
என்றாலும், நாமும் நமது வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகளைச்
சந்தித்துக் கொண்டும், அவைகளை எப்படி சமாளிப்பது என்று
சிந்தனை செய்து கொண்டுமிருக்கிறோம். அதைத்தான் இந்த சிறுகதைத் தொகுப்பில்
குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்தக் கதையைப் படிப்பதின் மூலம் நாம் எப்படி இருக்கிறோம், எப்படி இருக்கக்கூடாது, அதனால் என்னயென்ன விளைவுகள்
ஏற்படக்கூடும் என்னும் விழிப்புணர்வை இலேசாகக் காட்டி இருக்கிறேன்.
நமது இளம் வயதில் நாம் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால்
அதன் விளைவுகள் எதிர்காலத்தில் எப்படியெல்லாம் இருக்கக்கூடும் என்பதை ஒரு
கண்ணோட்டமாகக் காட்டியிருக்கிறேன்.
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி என்னை வாழ்த்தியருளிய கவிமாமணி மயன் அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசகர்கள் இந்தத்தொகுப்பைப்
படித்து அதனால் யாராவது ஒருவருக்கு மனத்தளவில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அதுவே
எனக்குக் கிடைத்த பாராட்டாகவும் வெற்றியாகவும் கருதுவேன்.
இவண் தங்கள் அன்பன்
ஆதனூரான்
(கவிமாமணி
பாரதி எழிலவன்)
பொருளடக்கம்
கதையின்
பெயர். பக்கம் எண்
1. தொணதொணப்பு
2. யதார்த்தம்
3. தன்சினம் தன்னைச்
சுடும்
4. அளவுக்குமேல் ஆசை
5. மனம் சொல்லும் மாற்றங்கள்
6. பாசப் புலம்பல்
7. அறுவடைகாலம்
1.தொணதொணப்பு
இன்று கல்யாணிக்கு
அலுவலக விடுமுறை நாள். ஏதோ ஒரு
காரணத்திற்காக அவளது அலுவலகம் இன்று விடுமுறையாக அறிவித்திருந்தார்கள். அலுவலகப் பணிக்குத்தான்
விடுமுறையே தவிர, அவளது இல்லத்தில் அவளுக்கு விடுமுறை
கிடையாது. அவளது இல்லத்தில் எவரும் அவளைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது
கிடையாது. அவளது மாமியாராகட்டும், மாமனாராகட்டும் அவளிடம்
அன்பாகவே நடந்து கொள்கிறார்கள்.
அவளது புக்ககத்தில் உள்ள பழக்க
வழக்கங்களை அவளது மாமியாரும் மாமனாரும் அவளுக்குத் தெளிவாகவே எடுத்துரைத்
திருக்கிறார்கள். அதன்படியே அவளும்
கூடுமானவரையில் அவர்களை அனுசரித்தே நடந்து வருகிறாள். இருந்தாலும் ஒருசில தவறுகள் நடந்துவிடுகின்றன.
அவைகளை மாமியார் நேரடியாக அவளிடம் குற்றமாகச் சொல்லமாட்டாள் எனினும், சிற்சில சமயங்களில் புலம்பித் தள்ளிவிடுவாள். அப்பொழுதெல்லாம்
கல்யாணிக்குச் சிறிது சங்கடமாக இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது
வேலைகளைச் செய்வதிலேயே முனைப்பாய் இருப்பாள்.
காலையில் நாலரை மணிக்கே எழுந்துவிடவேண்டும், வீட்டின்
வாயிலில் சாணம் தெளித்து, அரிசிமாக்கோலம் போடவேண்டும். இந்தக் காலத்தில் சாணம் தெளித்துக் கோலம்
போடும் பழக்கம் எத்தனை வீடுகளில் உள்ளது?
இதையெல்லாம் வாடகை
வீடுகளில் செய்யமுடியுமா என்ன? முதலில் சாணத்தை எங்கே தேடுவது.
அப்படிக் கிடைத்தாலும் அதைக்கரைத்து எங்கே தெளிப்பது? இந்தக் காலத்தில் எல்லாமே ப்ளாட்
வீடுகளாகத் தானே இருக்கிறது!
இல்லையென்றால் ஒண்டுக் குடித்தனமாக இருக்கும். இந்த வாசல்தெளித்துக் கோலம் போடுகிற
விவகாரமெல்லாவற்றையும் அந்த வீட்டின் சொந்தக் க்காரர்களே,
குடித்தனக் காரர்களிடம் மாதாமாதம் ஒரு
தொகையை வாங்கிக் கொண்டு, ஒரு வேலைக்காரியை
வைத்தோ அல்லது தாங்களாகவோ செய்து கொண்டு விடுவார்கள். ஆனால் தனி வீடாகவோ சொந்த வீடாகவோ இருந்தால்
நாம்தானே செய்து கொள்ள வேண்டும். காலையில் ஒரு நாலறை மணிக்கு இல்லாவிட்டாலும் ஒரு
ஐந்தரை மணிக்குள்ளாகவேனும் செய்துவிட வேண்டுமல்லவா? அப்படித்தான்
நமது கல்யாணியும் செய்யவேண்டிய தாகிவிட்டது.
அவள் திருமணமாவதற்கு முன்னர் ஏதாவது வீட்டு
வேலை களைச் செய்திருக்கிறாளோ. இல்லை சாணத்aதைத்தான்
கையால் தொட்டுத்தானிருக்கிறாளா? பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்த பெண்ணல்லவா, சாணத்தைப் பார்த்தாலே
அருவெறுப்பாக இருக்கும், வாயிலுள்ள உமிழ் நீரெல்லாம் வெளியே வந்துவிடும். அப்படி
குமட்டிக் கொண்டுவரும் அவளுக்கு. அவளுக்கு
மட்டும் தானா, அவளது
தங்கை பவானிக்கும் அப்படியே. அம்மா
எவ்வளவோ முறை சொல்லிப்பார்த்தும் பலனிருக்காது. யாராவது அவளது சொல்லைக் காதுகொடுத்துக்
கேட்டால்தானே: அந்த அம்மாள்
புலம்பிக்கொண்டே சாணத்தை வாசலில் தெளித்து விடுவாள், சிலநாட்கள் கோலமும் போட்டுவிடுவாள், ஆனால் பெரும்பாலான
நாட்கள் கல்யாணியோ, பவானியோ
கோலம்மட்டும் ஆசையோடு போடுவார்கள்..
அம்மாவின் புலம்பல்மட்டும் ஓயாது. ``இப்போமட்டும் ஓடிவாங்கடி
கோலம் போடறதுக்கு. புதுசுபுதுசா ஏதோ கத்துண்டு வந்து கோலம்போடறேளே, அழகா புள்ளிவெச்சு
கோலம் போடத் தெரியுமோ? சாணத்தைத்
தொடமட்டும் குமட்டிண்டு வர்றதாக்கும்.
சாணம்னா என்ன அவ்வளவு மட்டமா? பசுமாடு புல்லையும் வைக்கோலையும், புண்ணாக்கையும்
மட்டும் சாப்டுட்டு, நாம் சத்தோட
வாழறதுக்கு பாலைக் கொடுக்கிறதுகள். அந்த
சாணம் மட்டும் எப்படீடி நாறும். அந்த
சாணத்தை வீட்டு வாசல்லே தெளிச்சா விஷக்கிருமிகளெல்லாம் கிட்டே வராது, செத்துடும்டீ, செத்துடும். அது ஒரு கிருமிநாசினிடீ, அதை உங்க கையாலகூட
தொடமாட்டேங்கறேளேடீ. இந்தாத்துலதான், அதுவும் செல்லம்
கொடுத்து, செல்லம்
கொடுத்து கெடுத்துண்டிருக்கேனே,
எங்கிட் டேதான் இதெல்லாம் செல்லுபடியாகும்.
இன்னொருத்தன் ஆத்துக்கு வாழ்க்கைப் பட்டுண்டுபோனா இதெல்லாம் நடக்குமோ. என்னைத்தான் காரித்துப்புவா. நாங்கள்லாம் உங்கள் வயசுல எங்காத்துல அப்படி
சொல்லிடமுடியுமா என்ன? குமட்டுலேயே
குத்துவா. உங்களுக்கெல்லாம் நான் நன்னா இடம் கொடுத்துட்டேன். இப்படியெல்லாம் புக்காத்துல நர்நாட்டியம் பண்ண
முடியுமோ. போங்கோ போங்கோ எப்படியானும்
போங்கோ. எனக்கென்ன? நன்னா
மொத்துப் பட்டேள்னா அப்போ புரியும். சரி சரி கோலத்தையாவது
மத்தவா பார்த்து ரசிக்கற மாதிரி
நன்னா புள்ளிவெச்சுப் போடுங்கோடி.”
அடிக்கடி தாயார் பொரிந்து தள்ளுவாள். அவள் அப்பொழுது முணுமுணுத்தது, தொணதொணப்பாக
வேப்பங்காயாகக் கசந்தது.
இப்பொழுது, இவளுடைய விருப்பு
வெறுப்பெல்லாம் எடுபடுமா என்ன;
கல்யாணியின் மாமியார் மிகவும் நல்லவள்தான், இருந்தாலும் கொஞ்சம் பழமையிலும், ஆசாரத்திலும் ஊறிய
வள்தான். அவளுக்கு வீட்டில் அனைத்து
வேலைகளும் ஒழுங்கா கவும் முறைப்படியும் நடக்கவேண்டும். அப்படியும் ஏதாவது வேலையில் தவறுகள் ஏற்பட்டால், அவள் மற்றவர்களை
ஏதும் குறை சொல்லமாட்டாள். அவைகளை தனது உடல் தள்ளாமை யுடன் முக்கி முனகிக்கொண்டே, பலவிதமான
புலம்பல்களினூடே செய்து முடிப்பாள்.
யாரையும் குறை கூறமாட்டாள்,
திட்ட வும்மாட்டாள்.
அவள்
அப்படி நேரடியாகக் கூப்பிட்டுத் திட்டினால்கூட, அந்த காரியத்தை எப்படிச்செய்வது என்று கேட்டு தெரிந்து
கொண்டு செய்துவிடலாம். அதுவும்
சாத்தியமில்லை. இருந்தாலும் அம்மா சொல்லிக் கொடுத்த காரியங்கள்தான் இப்போழுது
அவளுக்குக் கைகொடுக்கிறது. அம்மாவின்
மூன்றுநாள் வீட்டு விலக்கின் பொழுது கல்யாணிதான் அம்மாவை கேட்டுக் கொண்டு சமையலும்
மற்ற வேலைகளும் செய்வாள். அவளது சமயலை அவளது அப்பா மெச்சிக்கொண்டே சாப்பிடுவா ஆனால் நம்
கல்யாணிக்குத் தனது மாமியாரின் புலம்பல் சற்று பயத்தையும்
மனச்சுமையையும் கொடுத்தாலும் அவைகளைப் பொறுத்துக் கொண்டு, தனக்குப்
பிடிக்கிறதோ இல்லையோ அந்த காரியங்களைச் செய்துமுடித்து விடுவாள். அப்பொழுதெல்லாம் அவள் தனது தாயாரை நினைத்துக்
கொள்வாள். தனது தாயார் தலைதலையாக அடித்துக் கொள்ளும் பொழுது, அதை தொணதொணப்பாக நினைக்காமல் கேட்டிருந்தால் இப்படி மாமியாரின் புலம்பலைக்
கேட்கவேண்டிய அவசியமி ருந்திருக்காதல்லவா!
``அப்பொழுது அம்மா சொல்லும் போதெல்லாம்
பிடிவாதமாக இந்த சாணத்தைத்தொட மறுத்தேனே,
ஆனால் இப்போ அதே வேலையை செய்துதான் தீரணும்கிற கட்டாயத்துல
செய்யறேனே! அப்பவே அம்மா சொல்றபடி கேட்டு சகிச்சுண்டு செஞ்சிருந்தால் அப்போ
அம்மாவும்க்கும் ஒத்தாசையா இருந்திருக்குமே.
பாவம் அம்மா” அவளது மன ஓட்டங்களுக்கிடையில் தனது
பணிகளைச் செய்து முடித்தாள்.
பிறகு, பரபரவென்று உள்ளே ஓடிப்போய், காப்பி ·பில்டாரில் காப்பிப் பொடியைத் திணித்து,
வென்னீரை அதன் தலையில் ஊற்றி அதன்மேல் மூடியால் மூடிவிட்டுச் சமையல்
அறையிலிருந்து வெளிப்போந்து குளியலறையை நோக்கி ஓடினாள். போகும் பொழுது ஒரு
குச்சியால் தனது உள்ளாடைகளையும், துவாலையையும் கொத்தி
எடுத்து, குளியலறையின் கதவின்மேல் வைத்துவிட்டுக் குளிக்கப்
புகுந்தாள்.
``ஏண்டி கல்யாணி, நீ
எழுந்திருக்கிறதோ ஏழுமணிக்கு மேலே. அப்படி அபூர்வமா ஆறு மணிக்கெல்லாம் எழுந்தாலும்
பல்லுதேச்சு காப்பி குடிக்கவே ரொம்பநாழி எடுத்துக்குவே. ஏண்டி காலா காலத்துல குளிக்கப்படாதோ? இப்படியே மசமசன்னு உட்கார்ந்துண்டு காப்பியை
சீப்பிக் குடிச்சுண்டே, T.V. பார்த்துண்டே இருந்துட்டு,
எட்டு மணிக்குக் குளிக்கப்போறியே, ஒருத்தன்
ஆத்துக்குப் போகவேண்டிய வயசுப் பொண்ணு இப்படி சோம்பரித் தனமா இருந்தா என்ன அர்த்தம்?”அம்மாவின் இத்தகைய புலம்பல் இன்னும் கல்யாணியின் காதில் சுப்ரபாதமாக
ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதற்கு அப்பாவோ, `` ஏண்டி
தினமும் குழந்தையைப் போட்டுக் கரிச்சுக் கொட்டறே? இவ
கொழந்தைதானே வாயா வார்த்தையாச்சொன்னாக் கேட்டுக்கறா. இன்னொருத் தராத்துக்குப் போனா, தானே கத்துண்டுடுவா. அதுக்காக இப்பவே இப்படி இவளை வறுத்துக் குத்தாதேடீ.
குழந்தைகள் பொறந்தாத்துல இருக்கிற வரையிலும் சந்தோஷமா இருந்துட்டுப்
போகட்டுமே. விடுவியா” என்று அவர்களுக்குப் பரிந்துகொண்டு பேசுவார்.
``இதோ பாருங்கோன்னா, இதுகளெல்லாம் பொண் கொழந்தைகள். வீணா செல்லம் கொடுத்துக் கெடுக்காதேங்கோ. உங்களால எனக்கு ஒத்தாசையா
ஏதாவது பண்ணமுடியறதோ? பொழுது விடிஞ்சதிலேர்ந்து பேப்பரும்
கையுமா இருந்துட்டு, ஆபீசுக்குப்போக நேரமாயிடுத்துன்னு என்னை
விரட்டுவேள். வேரென்ன செய்வேள். பாவம்
நம்ம ஆத்துக்காரி, ஒருத்தியா இருந்துண்டு கஷ்ட்டப்படறாளே,
ஏதாவது ஒத்தாசை செய்வோம், அட்லீஸ்ட் ஒரு
காய்கறியாவது அரிஞ்சு கொடுப்போம்னு தோணறதோ? இல்லையே. பேசாம ஒங்க வேலையைப் பார்த்துண்டு
இருங்கோ. இந்த குழந்தைகளையும் செல்லம்
கொடுத்துக் கெடுத்துடாதேங்கோ” அம்மாவின் இத்தகைய பேச்சால்
அப்பா வாயையே திறக்கமாட்டார். கப்சிப்.
``ஏண்டி சனியனே, இப்படியாடி விழுப்போட துணிகளை
யெல்லாம் கையாலே எடுத்துண்டு போவே? ஒரு குச்சியிலே
கொந்திண்டு போறதுதானே? ஒரு மடி விழுப்பு ஆசாரமெல்லாம் தரிஞ்சுக்கவேண்டாம்?
என்னைப் பார்த்தாவது கத்துக்க வேண்டாமோ?” அம்மாவின்
தொணதொணப்பு தாங்காது.
``போம்மா; எத்தனை துணிகளை குச்சியிலே எடுத்துண்டு
போறது? அதெல்லாம் என்னாலே முடியாதும்மா. மடியாவது
விழுப்பாவது, இந்த
இருபத்தோறாம் நூற்றாண்டிலும் இதெல்லாம்பார்த்துண்டிருக்கியே, நீ வேணும்னா அப்படியே இரு”
இவளது பதில்
கல்யாணியின் தாயாருக்கு எரிச்சலூட்டும். ``எப்படியாவது ஒழி”
என்று வாழ்த்துதான் கடைசியில் நிலைக்கும்.
``இப்போ? அம்மா அப்பொழுது
என்னவெல்லாம் செய்யச் சொல்லி நான் மறுத்தேனோ,
அதையெல்லாம் மாமியாரின் முணுமுணுப்புக்குப் பயந்துண்டு நானே செய்யறேன்.
ஹ்ம்..ஹ்ம்.. அப்பவே அம்மா சொல்படி கேட்டிருந்தேன்னா, இப்போ இந்த
மாமியார் முணுமுணுக்க மாட்டாளே.”
நினைத்துக் கொண்டே குளித்து முடித்து வெளியே வந்து பக்கத்து அறைக்குள்
புகுந்து கொண்டாள் கல்யாணி.
உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த கல்யாணி, அடுப்பறைக்குப்
போனாள். ·பில்டரில்
டிகாக்ஷன் இறங்கி விட்டிருந்தது. மெதுவாக தனது புடவைத் தலைப்பால் ·பில்டரைத்தூக்கி, அடிப்பாத்திரத்தில்
இறங்கியிருந்த டிகாக்ஷனை வேறு ஒரு பாத்திரத்தில் கவனமாக மாற்றிவிட்டு, பில்டரை மீண்டும்
அதன்மீதே வைத்து மீண்டும் அதில் வென்னீர் வார்த்து வைத்தாள். இத்தனை செயல்களையும் பொறுமையாகச் செய்தாள். ஒரு
பொட்டு டிகாக்ஷன்கூட கீழே சொட்டவில்லை.
இப்படித்தான் ஒருமுறை பிறந்த வீட்டில்,
அம்மா தனக்கு உடல்நிலை முடியாமையால்,
கல்யாணியை டிகாக்ஷன் போடச் சொன்னாள்.
கல்யாணியும் அம்மா சொல்லிக் கொடுத்தபடிதான் செய்தாள். ஆனால் பில்டரிலிருந்து டிகாக்ஷனை மாற்றும்
பொழுது பில்டாரின் சூடு தாங்காமல் ·பில்டரை
கிழே நழுவ விட்டு விட்டாள். அத்தனை
டிகாக்ஷனும் கிழே கொட்டி வீணாகியது.
``அய்யோ அய்யோ
பாவி, பாவி, அத்தனை
டிகாக்ஷனையும் கிழே கொட்டி விணாக்கிட்டியேடி; காப்பிப்பொடி விக்கற விலை
தரியுமாடி நோக்கு? அந்த மனுஷன் மாடா உழைச்சு சம்பாதிச்சுண்டு வரபணம்டீ. நோக்கு
எங்கே அதெல்லாம் தெரியப்போறது? பொம்மனாட்டிக்கு கொஞ்சமாவது பொறுமை வேணும்டீ. சூட்டை
தாங்கிக்கத் தெரியணும். இல்லேன்னா பில்டர் சுடும்னு தெரிஞ்சு துணியைப் புடிச்சுத்
தூக்கணும். எப்போ இதெல்லாம் தரிஞ்சுக்கப்
போறியோ? துக்கிரி..துக்கிரி..”
அம்மா அப்பொழுது திட்டியது மனதிற்கு வேதனையை அளித்தது. ஆனால் அதுதானே அவளது பாலபாடம். அது திருமணம் ஆகிய பிறகுதான் புரிந்தது.
கல்யாணிக்குத் திருமணம் ஆனபிறகு இப்படித்தான்
ஒரு முறை கை சூடுதாங்காமல் டிகாக்ஷன் கொட்டிவிட்டது. சப்தம் கேட்டு மாமியார்
ஓடிவந்தாள். மாமியார் திட்டுவாள் என்று
பயந்து நின்ற கல்யாணியை ஒருமுறை பார்த்தவள்,
அவளை ஜாடையால் அப்பால் போகச்சொல்லிவிட்டு, கீழே குனிந்து முக்கி முனகியபடி கீழே கிடந்த சூடான ·பில்டரை எடுத்து
வைத்துவிட்டு, சொட்டிக்கிடந்த
டிகாக்ஷனைத் துடைத்தாள். அவளது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.
``எந்த
அம்மாக்காரிக்கு தன் பொண்ணுங்கமேலே பொறுப்பு இருக்கு; குழந்தைகளுக்குக்
காரியம் சொல்லிக் கொடுத்திருந் தாததானே’ செல்லம் குடுத்து
குடுத்து கெடுத்து வெச்சுடராள்கள். இப்போ
நம்ம ப்ராணன்தான் அழியறது. காப்பிப்பொடி விற்கற
விலைல இப்படியெல்லாம் வீணாப்போறதே.
நேக்குமட்டும் உடம்புக்கு முடிஞ்சா நானே எல்லாத்தையும் பார்த்துண்டுடுவேன்.
பாழாய்ப்போன உடம்பு சொன்னபடி கேட்கமாட்டேங்கறதே. இந்தமாதிரி காரியம் பழகிக்காத
பச்சைக் குழந்தைகளைக் கல்யாணம் பண்ணிண்டு அவாளுக்கும் சொல்லிக் குடுக்க முடியாமல், நாமும் செய்ய
முடியாமல் தவியாய்த் தவிக்க வேண்டியிருக்கே. ஹ்ம்..ஹ்ம் நான் ஏதாவது சொன்னா
மாமியார் போர்வையை இழுத்துப் போர்த்திக்கறதா பேர் வெச்சுடுவா. ஒலகத்துல இருக்கற மாமியார் மாதிரியா இருக்கேன்
நான்? பாவம் இந்தப் பொண்ணைச்சொல்லி என்ன ப்ரயோஜனம்? எல்லாம், இவளைப் பெத்து
வளர்த்த தாயைச்சொல்லணும். கச்சிதமாய் காரியத்தைச் சொல்லிக் குடுத்திருக்க வேண்டாம்? ....” இப்படியாக பொருமலும்,
முணகலுமாக அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு நகர்ந்தாள்.
கல்யாணிக்கு, தன்னை செருப்பால் அடித்தது போலத் தோன்றியது. `இது என் அம்மாவோட
குத்தமா, இல்லை
என்னோட குத்தமா?’ என்று
எண்ணியெண்ணிக் குமைவாள்.
கிரைண்டரில்
மாவு அரைக்கவேண்டுமானால் கனமான குழவியை அலம்பித்
தூக்கிப் போட்டு அறைக்க வேண்டும்.
இப்பொழுது அந்தச் செயல்களை மிகவும் கவனமாகச் செய்கிறாள். இந்த சமயத்திலும், அவளுக்குத் தனது
தாயார் சொன்னதுதான் முதலில் ஞாபகத்துக்கு வருகிறது.
``ஏண்டி
இந்த மாவு அறைக்கறதுக்குக் கூட நாந்தான் வரணுமா? சின்னஞ்சிறிசுகள்
நீங்கள் செய்யக் கத்துக்கப் படாதோ? என் கையிலேதான் மோதிரம் போட்டிருக்கோ? எல்லாத்தையும்
நாந்தான் செய்யணும்னு” அவளது
தாயார் இறைந்துகொண்டே மாவு அறைத்தது இன்றுபோல் இருக்கிறது.
மாவு
அறைத்தாகிவிட்டது. நல்ல பதத்தில் மாவையும் அறைத்து, க்ரைண்டரை ஓடவிட்டே அதை வழித்து எடுத்துப் பாத்திரத்தில்
வார்த்தாள். குழவியைத் தூக்கி,
அதில் ஒட்டிக் கொண்டிருந்த மாவையும் வழித்தெடுத்தபின், கிரைண்டர்
குழியில் கையை விட்டு அதிலிருக்கும் மிகுதி மாவையும் எடுத்தாள். அப்படி செய்யும்
பொழுது, சற்றும் எதிர்பாராத விதமாக குழவியைத் தாங்கிப்பிடித்திருந்த
கை வழுக்கவே, குழவி
பள்ளத்தில் விழும் தருணம் அவள் சட்டென்று தனது கையை இழுத்துக் கொண்டாள், இல்லையென்றால்
அவளது கை முழுவதுமாக நசுங்கிப் போயிருக்கும். ஆனால் சுண்டு இரலில் பட்டு காயமானது.
அதிலிருந்து ரத்தம் பீரிட்டது. கல்யாணி
வலியால் துடித்துப் போய்விட்டாள். குழவி விழும் சப்தம் கேட்ட அவளது மாமியார்
பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தாள். கல்யாணியின் கையில் இரத்தம் பீரிடுவதைக் கண்டு
பதைத்துப் போனாள்.
``என்னடீயிது, இரத்தம் இப்படி
கொட்டறது, வலியைப் பொறுத்துண்டு,
பல்லைக் கடிச்சுண்டு பொறுத்துண்டிருக்கியே, வாயைத் தொறந்து கத்த மாட்டியோடீ பொண்ணே? பாவம்டீ நீ இந்த
மாமியார் உன்னை ரொம்ப வேலை வாங்கறேனோடீ?
இப்படி ரத்தம் கொட்டறதேடி... வா இப்படி”
என்றவள், கல்யாணியைக்
கைத்தாங் கலாக அழைத்து கூடத்திற்கு வந்து அவளை சோபாவில் அமரவைத்தாள். பிறகு
ஓடிச்சென்று டிஞ்சரும் பஞ்சும் கொண்டு வந்து,
டிஞ்சரை பஞ்சில் நனைத்து அவளது விரலில் மெதுவாக வைத்தாள். அடிபட்ட வலியை விட டிஞ்சரின் எரிச்சல்தான்
அதிகமாக இருந்தது கல்யாணிக்கு.
அதைப்பார்க்க மாமியாருக்கு கண்களில் நீர் வந்துவிட்டது.
``பாவி நான், சின்னக்குழந்தையை
இப்படி துடிதுடிக்க வைச்சுட்டேனே;
“ கண்களில் நீர் சோர, ஒரு மெல்லிய
துணியால் காயம்பட்ட விரலின்மீது கட்டுப் போட்டாள்.
கல்யாணிக்குத்
தனது மாமியாரைப் பார்க்க பாவமாக யிருந்தது. ``பாவம்மா
நீங்க. நேக்கு ஒண்ணுமில்லே,
இதுல உங்க தப்பு என்ன இருக்கு? இப்படி அடிபடறதெல்லாம் சகஜம்தானே. நாந்தான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும். பரிசா அடி படல்லியே, அதுவரைக்கும்
சந்தோஷம்தான். இதுக்கெல்லாம் போய் நீங்க
வருத்தப்படலாமா? இந்த
வேலையைக் கூட நான் செய்யாம வேற யார் செய்வாம்மா?” மாமியாருக்கு ஆறுதல் சொன்னாள் மருமகள்.
``போடி போடி
அசடே, எனக்கு
ஆறுதல் சொல்றியா? நீ எவ்வளவு நல்ல பொண்ணு!
சமத்தா ஆத்து வேலையையெல்லாம் கவனிச்சுக்கறே; அத்தோட ஆபீசுக்கு வேறே போயிட்டு வரே! நான் எவ்வளவுதான் முணுமுணுத்தாலும்
அதையெல்லாம் காதுல போட்டுக்காம உன் வேலையைப் பார்த்துணடிருப்பியே, அந்த நல்ல மனசு
யாருக்கு வரும், சொல்லு?
நான் உன்னை எந்தவிதமான குறையும் சொல்லமாட்டேன், உன் அம்மா
நோக்கு காலாகாலத்துல நல்லபடியா வேலைகளையெல்லாம் சொல்லிக் கொடுக்கல்லையே அப்படீங்கற
ஆதங்கம்தான். ஆனால் நீ கெட்டிக்காரி, எல்லா காரியங்களையும்
நீயே தெரிஞ்சுண்டு எவ்வளவு அழகா செய்யறே!
உன்னை நான் நாட்டுப்பொண்ணா அடைய பூர்வ ஜென்மத்துல ரொம்ப அதிர்ஷ்டம்
பண்ணியிருக்கணும். இப்போ வலி எப்படி
இருக்கு? கொஞ்சம் தேவலாமா?”
மாமியாரின்
இத்தகைய பேச்சால் மிகவும் மகிழ்ச்சியுற்ற கல்யாணி, மாமியாரின் கையைப் பிடித்துக்கொண்டு, ```நீங்க இப்படி
சொல்றதைக் கேட்க ரொம்ப சந்தோஷமாயிருக்கும்மா.
ஆனால் ஒரு திருத்தம்,
என்னோட அம்மா என்னோட கல்யாணத்துக்கு முன்னாலேயே, நான்
பருவம் வந்ததிலேர்ந்தே எனக்கு வேலைகளையெல்லாம் கத்துக் கொடுத்திருக்கா. எவ்வளவோ
தடவை, `என்
கையிலேதான் மோதிரம் போட்டிருக்கா என்ன,
நாந்தான் எல்லா காரியங்களும் செய்யணுமான்னு அடிக்கடி கோவிச்சுப்பா. நாந்தான் அம்மா சொல்றதையெல்லாம் காதுல
போட்டுக்காம விளையாட்டுத்தனமா இருந்துட்டேன். அப்படி இருந்தது எவ்வளவு முட்டாள்தனம்னு
இப்பதான் பு¡¢யறது.
உங்களைப்போல ஒரு நல்ல மாமியார் நேக்கு கிடைச்சிருக்கச்சே, நேக்கு என்ன
வேணும் சொல்லுங்கோம்மா. ஆனால் நாந்தான்,
அம்மா ஆத்துல விலக்கா இருந்தபோதெல்லாம் சமையல் செய்வேன். ஆத்துல எல்லோரும் ரொம்பநன்னா யிருக்குன்னு
சொல்லி சப்புக்கொட்டி சாப்பிடுவா. நான்
நன்னா ஆத்துக் காரியங்களையெல்லாம் செய்வேன்.
ஆனால் அம்மா சொல்படி அவ்வளவா கேட்கமாட்டேன். இப்போ நான் எல்லா காரியங்களையும் நன்னா செய்யக்
கத்துண்டுட்டேன்மா. நான் ஏதாவது தப்பு செஞ்சா, சொல்லிக்கொடுங்கோ
நான் டக்குன்னு புரிஞ்சுண்டுடுவேன். சரியாம்மா?” என்றாள்.
அதைக்கேட்ட
கல்யாணியின் மாமியார், ``அப்படியா
சமத்து,” என்று
தன்மருமகளை அன்புடன் கட்டிக்கொண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் உச்சி முகர்ந்தாள்.
**********
2. யதார்த்தம்
நளினி, தினமும் காலை
வேளைகளில் பம்பரம்போல தனது இல்லப்
பணிகளில் ஈடுபடுவாள். தினமும் இவ்வாறே அதிகாலையில் துயிலெழுந்து, தனது காலைக்
கடன்களைக்கூட முடிக்க நேரமில்லாமல்,
இல்லத்தில் அனைவருக்கும் கா·பி,
டிபன் போன்றவற்றைச் செய்துகொடுத்து,
தனது குழந்தைகளை எழுப்பி, அவர்கள்
தேவைகளைப் பூர்த்திசெய்து,
பள்ளிக்கு அனுப்பும்வரையில் ஓய்வேயிருக்காது.
பிறகு, தனது
கணவன் ராமகிருஷ் ணனையும் கவனிக்க வேண்டிய
பொறுப்பும் இருக்கும். அவனது தேவைகளைப்
பூர்த்திசெய்து, சா¢யாக எட்டு மணிக்கு
டைனிங் டேபிளில் ஆஜராகும் அனைவருக்கும்,
(அவளது மாமனார், மாமியார்
உள்பட) காலைச்சிறுண்டியை அளித்துவிட்டு நிமிர்ந்தால், வாயிலில்
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் ஆட்டோ வந்துநிற்கும். குழந்தைகள் சுஜியையும், சுரேஷையும் அதில்
பாதுகாப்பாக அமரவைத்து அனுப்பிவிட்டு உள்ளே ஓடிவந்து தானும் இரண்டு இட்லிகளை
விண்டு வாயில் போட்டுக்கொண்டாளானால்,
அதற்குள் வீட்டு வேலைசெய்யும் வேலைக்கா¡¢
வந்துவிடுவாள். அவளுக்கு சமைத்த
பாத்திரங்களையும், அழுக்குத்துணிகளையும்
கொடுத்து அவளையும் கண்காணிக்க வேண்டும்.
அவளும் காலை ஒன்பது மணிக்குத்தான் வருவாள். அவளுக்கும் டிபன் காபி கொடுத்தால் கொஞ்சம்
சுறுசுறுப்பாக வேலசெய்வாள். அவள்,
வீட்டைத்துடைத்து, பாத்திரங்கள்
விளக்கி, துணிதுவைத்துக்
காயவைத்து என்று எல்லா வேலைகளையும் பம்பரம் போல் செய்வாள். ஆனால் அவளது பணிநேரம்
இரண்டுமணி நேரம்தான். நடுநடுவே மாமனார் மாமியா¡¢ன் கோ¡¢க்கைகளை
நிறைவேற்றவேண்டும். பிறகு மதிய சமையலும்
செய்யவேண்டும். மதியம் இரண்டு மணிக்கு தனது மாமனாருக்கும் மாமியாருக்கும் பா¢மாறிவிட்டு, தானும்
சாப்பிடுவாள். அவளது கணவன் மதிய உணவைத்
தனது அலுவலகத்திலேயே சாப்பிட்டு விடுவதனால்,
இரவு உணவு சுடச்சுட வேண்டும். அதுவும் செய்யவேண்டும். ஆனால் மாமனார் மாமியாருக்கு இரவு டிபன்தான், அதனால்
அவர்களுக்குத் தனியாக ஏதாவது செய்துகொடுக்கவேண்டும். இரவு உணவு குழந்தைகளுக்குக்
கொடுத்துத் தூங்கவைக்க வேண்டும்.ஆனாலும் அவளது மாமியார் அவளுக்கு உறுதுணையாக
சிறுசிறு உதவிகளைச் செய்துகொடுப்பாள்.
காய்கறிகள் அ¡¢ந்து
கொடுப்பது, தேங்காய்
துறுவிக் கொடுப்பது, குழந்தைகளுக்கு
ட்ரஸ் போட்டுவிடுவது, அவர்களுக்கு
உணவு ஊட்டிவிடுவது என்று அவ்வப்போது செய்துகொடுப்பாள்.
மாமனார்
மட்டும் எதையும் கண்டுகொள்ளமாட்டார். தனது பணிகளைத் தானே
செய்துகொண்டுவிடுவார். தனது துணிகளைத்
தானே துவைத்து உலர்த்தி மடித்து வைத்துக் கொள்வார். காலையில் எழுந்தவுடன் வாக்கிங்
சென்றுவிட்டு வந்து, குளித்துத்
தனது பணிகளைச் செய்துகொண்டுவிட்டு,
சா¢யாக எட்டு
மணியளவில் டைனிங் டேபிள் முன் ஆஜராகிவிடுவார்.
அவரால் நளினிக்கு எந்தவிதமான தொந்திரவும் கிடையாது. நளினிம்மா, நளினிம்மா என்று பெற்ற தந்தையைப் போல மிகவும் பாசமுடன்
நடந்து கொள்வார்
ராதாகிருஷ்ணனோ, தனது மனைவி
நளினியிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வான்.
அவளிடம் தன் உயிரையே வைத்திருந்தான். இரவு படுக்கப்போகும்போது மணி ஒன்பது
ஆகிவிடும். நளினி உள்ளே வருவதற்காகக்
காத்திருப்பான். அவள் வந்ததும் கொஞ்சலும்
பேச்சும்தான். அன்று முழுவதும் நடந்தவைகளை
இருவரும் பரஸ்பரம் பா¢மாறிக்கொள்ளாமல்
தூங்கமாட்டார்கள். குழந்தைகள் இருவரும் தங்கள்
தாத்தா பாட்டியுடந்தான் தினமும் படுத்துக் கொள்வார்கள்.
நளினிக்கு,
தினமும் பகல்முழுதும் செய்த பணிகளின் சிரமமும் களைப்பும், தனது கணவனைக்
கண்டவுடன் அவனது பா¢வு
வார்த்தைகளிலும் அன்பிலும் கதிரவனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும். புதுத்தெம்பும் உற்சாகமும்
ஏற்பட்டுவிடும். அப்படியே தனது கணவனின்
மார்பில் உறைந்து உரையாடியபடியே உறங்கிவிடுவாள். இப்படிப்பட்ட வாழ்கை
அலுப்பாயிருக்கிறதா, சுகமாயிருக்கிறதா
என்றுகூட அவளால் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியவில்லை. கணவன் மாமனார் மாமியார் இவர்களின் பாசமழை
இப்படி அவளைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. துன்பத்தில் இன்பம் என்று இதைத்தான்
சொல்வார்களோ!?. ஆனால்
நளினிக்கு இவையெல்லாம் இன்பமாகவும்,
கடமையாகவுமே பட்டதே அல்லாமல் ஒருபொழுதும் துன்பமாகத் தோன்றியதேயில்லை.
அவளுக்கு, மதியம் இரண்டரை
மணிமுதல் மாலை நாலரை மணிவரையில்தான் சற்று ஓய்வு கிடைக்கும். அப்பொழுது சிறிது
கண்ணயர்வாள். இன்றும் அவ்வாறே அவளுக்கு
நேரம் கிடைத்தது. தினமும் சற்று கண்ணயர்
பவளுக்கு, இன்று ஏனோ
தூக்கம் வரவில்லை. காரணம் எதேச்சையாக, அவள் பீரோவைத்
திறந்தபொழுது, அவளது பழய
கைப்பை கண்ணில் படவே, அதை
எடுத்துப் பார்த்தவளின் கண்களுக்கு ஒரு காகிதக்கவர் இருப்பது தொ¢ந்தது. அது ஒன்றும் புதிய கவர் இல்லையென்றாலும், அதை எடுத்துப்
பார்த்தவளின் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.
அதை எடுத்துப் பார்த்தவள் கண்களில்
அதிலொரு புகைப்படம் இருப்பது தொ¢யவே, அது
அவளைப்பார்த்து சி¡¢ப்பதாக
உணர்ந்தாள். பதட்டத்துடன் அதை உரையிலேயே
வைத்தவள், அந்தக்
கவரை அது இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு,
தனது படுக்கையில் வந்து அமர்ந்தாள்.
அவளது கண்கள் பனித்தன. நெஞ்சம்
படபடவென்று அடித்துக் கொண்டது. அதனால்
அவளது மனம் சற்று பின்னோக்கி ஓடியது.
சுமார் பத்து
வருடங்களுக்கு முன்பு, நளினி, ரமேஷ் என்பவனைக்
காதலித்தாள்.அவனும் அவளை மனமாறக் காதலித்தான்.இருவரும் சுற்றாத இடமில்லை.ஹோட்டல், பீச், பார்க் என்று
சுற்றினார்கள். முதலில் ரமேஷ¤ம், நளினியும்
நண்பர்களாகத்தான் பழகினார்கள். நாளடைவில் அந்த நட்பு காதலாக மலர்ந்தது.ஒருவரையொருவர்
நன்கு பு¡¢ந்து
கொண்டதாக உணர்ந்தார்கள். இருவர் மனதிலும்
ஒரு சிறு பயம் கெளவிக் கொண்டிருந்தது. நளினியின் இல்லத்தார் அவளுக்கு வரன்
பார்க்கும் வேளையில், யதேச்சையாக
ஒரு ரெஸ்டாரண்டில் இவர்களிருவரையும் நளினியின் இளைய சகோதரன் அவர்களுக்கு தொ¢யாமல் பார்த்து
பெற்றோ¡¢டம்
சொல்லிவிட்டான்.
நளினியின்
தந்தை மிகவும் பொறுமையுடனும்,
புன் சி¡¢ப்பு
மாறாமலும்தான் அவளிடம் விசா¡¢த்தார்
நளினியும் நடந்தவைகளை அவா¢டம்
கூறினாள். மனத்தில் பயம் வாட்டியெடுத்தாலும்,
அவள் அந்த ரமேஷைக் காதலிப்பதாகவும்,அவர்கள்
ஓருவரையொருவர் நன்றாக பு¡¢ந்து
கொண்டு விட்டதாகவும்,அந்த
குடும்பம் நல்ல வசதியான பாரம்பா¢யம் மிக்க
குடும்பம் என்றும், அவர்
சம்மதித்தால் மட்டும் தான் கல்யாணத்திற்கு சம்மதிப்பதாகவும் தனது தந்தையிடம்
அமைதியாகக் கூறினாள். நளினியின் தாயார் சற்று பதட்டமாகவே பேசினாலும் தந்தை நிதானமாகவே
இருந்தார். இறுதியில் ரமேஷின் வீட்டு விலாசத்தை வாங்கிக் கொண்டு, அவர்களைப் போய்
பார்த்தார். அவர்கள் முதலில் சற்று அதிர்ச்சியடைந்தபோதிலும், தனது மகனைக்
கூப்பிட்டு விசா¡¢த்தார்.
பின்பு அவரும் அவரது மனைவியும் சம்மதித்து,அன்றே
பெண் பார்க்க வருவதாக ஒப்புக்கொண்டு,பெண்
பார்க்கவும் செய்தனர். .ஜாதகம் பார்க்க வேண்டும் என்று கூறி ஜாதகப் பொருத்தமும்
பார்த்தனர். பத்து பொருத்தத்திற்கு ஆறு பொருத்தம் இருந்ததால் மேற்கொண்டு பேச
அழைத்தனர்.
தங்களது
பெற்றோர் தனது திருமணத்திற்கு சம்மதித்து
விட்டதைக் குறித்து ரமேஷ¤ம், நளினியும்
மகிழ்சிவயப்பட்டனர். இரு கும்பத்தாரும்
கலந்து பேசினர். அதில்தான் மனபேதம்
ஏற்பட்டது முதலில் நளினியின் தந்தை, ரமேஷின்
குடும்பத்தைப் பார்த்து சற்று மிரண்டாலும்,
எல்லாம் சா¢யாகத்தான்
நடக்கும் என்ற முடிவில் சம்பந்தம் பேசத்தொடங்கினார். ஆரம்பத்திலேயே தனது மகளுக்கு பத்து சவரன்
நகைகள்தான் போடமுடியும் என்றும் வரதக்ஷணை ஏதும் கொடுக்க இயலாது என்றும் , திருமணத்தைச்
சிறப்பாகச் நடத்திக் கொடுத்து விடுவதாகவும் கூறிவிட்டார். ஆனால் ரமேஷின் பெற்றோர் கேட்டது அவரைத்
திணறவைத்துவிட்டது.
ரமேஷின்
பெற்றோருக்கு சென்னையில் இரண்டு மூன்று பங்களாக்கள் இருப்பதாகவும்,
தாங்கள் பொ¢ய தனவந்தர்கள்
என்றும்,
அதனால் தங்கள் ஒரே
வா¡¢சான ரமேஷின்
திருமணத்தை வெகு சிறப்பாக நடத்த ஆசைப்படுவதாகவும் கூறியதோடு, தனது மருமகள்
அதற்குத் தகுந்த அந்தஸ்த்தோடு அந்த வீட்டில் புகுவதுதான் அவர்களுக்குப் பெருமை
அளிக்கும் என்றவர் ஒரு பட்டியலை வாசித்தார்.
அதைக்கேட்ட நளினியின் தந்தைக்கு மயக்கமே வந்து விட்டது. அவர் ரமேஷின்
பெற்றோரைப் பா¢தாபமாகப்
பார்த்தார். தன்னால் நூறு சவரன் நகைகள்
போட இயலாது என்றும் அவர்கள் கேட்கும் மற்ற
சீர்வா¢சைகளைச்
செய்ய தமக்கு வசதிகள் இல்லையென்றும் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அதற்கு அவர்கள் மசிவதாயில்லை. அதற்குமேல்
ஒன்றும் பதில்பேசமுடியாமல் நளினியின் பெற்றோர் தங்கள் இல்லம் ஏகினர்.
ரமேஷின்
பெற்றோர் கேட்ட நகைகளையும்,
மற்றும் சீதனம், வரதக்ஷணை
ஆகியவற்றை அறிவித்ததும், நளினிக்கு
ஆத்திரமாக வந்தது. மறுநாள் அவள் ரமேஷிடம்
கேட்க, அவனும்
அவளுக்குப் பிடிகொடுக்காமல் பதில்சொன்னான்.
“இதோபார்
நளினி, உங்கள்
குடும்பம் இவ்வளவு மோசமான வசதிபடைத்த குடும்பமாக இருக்கும் என்று நான் கனவிலும்
நினைக்கவில்லை. எங்களைப்போல அதிகமாக
வசதிபடைத்தவர்களாக இல்லாவிட்டாலும்,
கொஞ்சமாவது வசதியுள்ளவர்களாக இருப்பீர்கள் என்று நம்பினேன். எனக்கு உன்னை கல்யாணம் செய்துகொள்ள எந்தவிதமான
ஆட்சேபணையும் இல்லை. நாம் மூணு வருஷமா
சின்சியராக் காதலிக்கிறோம். அதனால உன்
அப்பா அம்மா கொஞ்சம் விட்டுக்கொடுத்து என் அப்பா அம்மா சொல்றபடி செய்யறதுதான் சா¢யாவரும்னு
எனக்குத் தோணறது. அவங்க நம் காதலை
ஏத்துண்டதே பொ¢ய விஷயம்.”என்றான்.
“அப்படின்னா, அவங்க கேட்கறது சா¢ன்னுதான்
நினைக்கிறீங்களா?”
“ஆமாம்
நளினி. அவங்க கௌரவத்துக்கு ஏத்தாப்போலத்தானே அவங்களால கேட்கமுடியும்?
எப்படியாவது அவங்க சொல்றபடி செஞ்சு நம்ப கல்யாணத்தை நடத்தி வைக்கிறதுதான் உங்க
அப்பா அம்மாவோட கடமை. நாம் ஏன்
இதுக்கெல்லாம் அநாவசியமாகக் கவலைப்படணும்.”
சர்வசாதரணமாக சி¡¢த்துக்கொண்டே
பதில்சொன்னான் ரமேஷ்.
“என்ன
ரமேஷ், நீங்களும்
இப்படிப்பேசறீங்க? எங்க நிலைமையைப் பத்தி உங்களுக்குக் கவலை இல்லையா என்ன?”
ரமேஷ் தன்
தோள்களைக் குலுக்கிக்கொண்டு,
தனது இரு கைகளையும் வி¡¢த்தான். பிறகு,
“நான் ஏன் டியர் உங்க கும்பத்தைப் பத்தி கவலைப்படணும்?
அது அவங்க ப்ராப்ளம். அதை அவங்களுக்குள்ளேயே சால்வ் பண்ணிக்கட்டும். நாம் ஒண்ணும் கவலைப்பட வேண்டாமே டியர்.” என்று சொல்லி
அவளது கன்னத்தைத் தட்டப்போனான்.
சட்டென்று அவனது
கையைத் தட்டிவிட்டவள், “இப்படி
இருப்பீங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கல்லை ரமேஷ். எங்க அப்பா அம்மாவைப்பத்தி உங்களுக்குக்
கவலையில்லை. ஆனால் உங்களுக்கு நான்மட்டும் வேணும் இல்லையா ரமேஷ்?” என்றாள் நளினி எ¡¢ச்சலுடன்.
“எஸ்டியர்,
இதிலென்ன சந்தேகம் உனக்கு?
இட்ஸ் ஆல் தேர் ப்ராப்ளம்,
ஒய் வி ஷ¤ட் பாதர்
அபௌட் இட்”
சீறினாள்
நளினி “வாட் எ
மேன் யுவார்? ஈஸ் தட்த மேனா¢ஸம்? ஆர்யூ மேட் ஆர்
செல்·பிஷ்?”
அவன் சி¡¢த்தான். சி¡¢த்தபடியே அவளைத்
தொட்டான். அறுவெறுப்புடன் அவனது கையைத் தட்டிவிட்டு விலகினாள். அவன் புன்சி¡¢ப்பு மாறாமலே அவளுக்கு பதில்சொன்னான்.
“எஸ்பேபி, நான்
பைத்தியம்தான். நான்
சுயநலக்காரனேதான். அதாவது உன்மேலே
பைத்தியம்தான், உன் அழகு,
உன் தோற்றம், உன்
பொலிவு இவைமேலே பைத்தியம்தான். இத்தனை வருஷமா
நாம் பழகியும், நான்
உன்னைத் தொடவிடாமல் ஒரு டிஸ்டன்ஸை மெயிண்டெய்ன் பண்ணறியே: அதைப்பார்த்து பைத்தியம்தான். உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கத்
தயாராயில்லைங்கற செல்·பிஷ்தனம்தான்.
எதையும் நான் மறுக்கல்லை. ஆனால்
சீர்செனத்தி விஷயமா என்னோட பெற்றோர்ட்ட என்னால பேசமுடியாது. இது ஷ்யூர்”
“இது
என்னங்க பைத்தியக்காரத்தனமான பேச்சு?
எங்க அப்பாவுக்கு, நாங்க
குடியிருக்கிற ஒரே ஒரு வீடுதான் சொந்தம்.
அந்த வீட்டுக்கடனும் இன்னும் முழுசா அடைபடல்லை. மேலும் அப்பாவோட சம்பாத்தியத்துல ஒரு
குறிப்பிட்ட அளவுக்கு மேலே கடன்வாங்க முடியாது.
என்னோட
தம்பிகளும்
இன்னும் படிச்சு முடிக்கல்லை. வேற எந்த
விதமான வருமானமும் என் சம்பளத்தைத் தவிற ஏதும் கிடையாது. என் சம்பளத்துல சேர்த்து வெச்சதைத்தான் என்
கல்யாணத்துக்கு செலவு செஞ்சுக்கணும். தவிர, என்
கல்யாணத்துக்கப்புறம் என் சம்பளமும் அவர்களுக்குக் கிடைக்காது. நீங்க இதையெல்லாம் யோசிக்கணும்?” என்றாள்
படபடப்புடன்.
அவன்
ஆவேசமாகத் தனது கையை ஆட்டிப் பேசினான். “நோ..நோ..நோ..நோ.., ஒய் ஐ ஷ¤ட் கன்ஸிடர்
ஆல்தீஸ் நான்சென்ஸ்? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னா, என்னால
இப்படியெல்லாம்
கீழிறங்கி
வரமுடியாது. என் அப்பா அம்மா சொல்றபடி
செய்யறதுன்னா, ஊர் அறிய
நம் கல்யாணம் நடக்கும். இல்லைன்னா
கோயில்லதான் நடக்கும். ஆனால் என் பெற்றோர்
சம்மதத்தோட நடக்கிற கல்யாணம்தான் ¡¢யல். நீ
ரெண்டாம்பக்ஷமாத்தான் வாழ்ந்தாகணும். ஆனால் என்னால இந்த ஜென்மத்துல உன்னை மறக்கமுடியாது” இதைக்
கேட்டவளின் மனம் துணுக்குற்றது. முகத்தில்
கோபம் கொப்பளித்தது. கண்களில் கண்ணீர்
வெள்ளமென பாய்ந்தது. உடல் நடுங்கியது.
அப்பொழுது அவள் காளி அவதாரம் எடுத்ததுபோல் இருந்தாள்.
“சீ..சீ..நீங்க
ஒரு மனுஷனா? இத்தனை நாளா இப்படியொரு வக்கிரம் உங்களுக்குள்ளே இருக்கிறதை
நான் கவனிக்கவே இல்லையே. நான் ஒரு ஏமாளி.
பைத்தியக்கா¡¢. உங்களைப்போய்
நம்பி உத்தமர்ன்னு எண்ணி காதலிச்சேனே: போதும்டா சாமி: உங்க சங்காத்தமே
வேண்டாம் இனிமே நீங்க உங்க பெற்றோர்
சொல்ற பணக்காரப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிண்டு ஹேப்பியா இருங்க” என்று சீறியவள், விருட்டென்று
திரும்பி நடக்கவாரம்பித்தாள் கண்ணீர்மல்க.
அவன் தாவி அவளது கையைப் பிடித்தான்.
அவன் கண்களிலும் நீர் நிறம்பி இருந்ததை அப்போதுதான் அவள் கவனித்தாள்.
“மைடியர்
நளினி, யதார்த்தத்தைப்
புரிஞ்சுக்கோ. நான் செல்வச் செழிப்பிலேயே
பிறந்து, வளர்ந்து, அதுலேயே
வாழ்ந்துண்டிருக்கேன். நான்
சம்பாதிக்கிறது என்னோட பாக்கெட் மனிதான்.
இதுலேர்ந்து என்னால வெளியிலே வந்து கஷ்டப்படமுடியாது. என் அப்பாவோட சொத்தே மூணு தலைமுறைக்கு
வரும். நான் அவரோட கௌரவத்தையும் பார்க்கணும். வேற வழியே இல்லை. சத்தியமா நான் உன்னைக் கல்யாணம்
பண்ணிக்கிறேன். நம்மோட காதலுக்காக, ஆசைக்காக. நாம
தனியா வாழலாம். உன்னைத் தனியா வெச்சு ராஜாத்தியாட்டமா வாழவைக்கிறேன் என்ன?” என்றான்.
“சை..” என்று அவனது
பிடியை உதறியவள், “ தூ..தூ..நீயெல்லாம்
ஒரு மனுஷன். நான் போய் உன்னை,
உன்னை. சீ” என்று காரிஉமிழ்ந்தவள், கண்ணீர்
கன்னத்தில் வழிய ஓடினாள் அந்தப்பாவை. ரமேஷின் கண்களும் குளமாயின. இத்தனை நேரமும் பல்லைக் கடித்துக்கொண்டு தனது
உணர்ச்சிகளை அடக்கியபடி பேசிக்கொண்டிருந்த ரமேஷ் தன் கைக்குட்டையால் முகத்தை
மூடியபடி அழுதான். அவன் அழுதான் என்பதற்கு
அடையாளமாக அவனது உடல் குலுங்கியது.
“நளினி
என்னை மன்னிச்சுடு. நான் என் உயி¡¢னும்
மேலாக உன்னைக் காதலிக்கிறேன். ஆனால்
என்னால் என்னோட பெற்றோரோட சொல்லைத் தட்ட இயலாது. ஸா¡¢ நளினி,
வொ¢ வொ¢ ஸா¡¢.
என்னை மன்னிச்சுடு. நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து, நீ கல்யாணம்
பண்ணிண்டு சௌக்யமாய் சந்தோஷமாய் வாழ்”
என்று அவனது உதடுகள் முணுமுணுத்தன.
நாட்கள்
ஓடின, நளினியின்
பெற்றோர் மறுபடியும் அவளுக்கு வரன் தேட முனைந்தனர். தொ¢ந்த
நண்பர் மூலமாக ஒரு வரன் வந்தது. ஜாதகமும்
சற்றேறக்குறைய ஏழு பொருத்தங்கள் கூடியிருந்தன.
பெண் பார்க்கும் படலமும் வந்தது. இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்ய
முடிவெடுத்தனர். மாப்பிள்ளை
ராமகிருஷ்ணனுக்கும் நளினியை மிகவும் பிடித்துவிட்டது. அந்த சமயத்தில் நளினி தனது
தந்தையின் காதில் மெள்ள முணுமுணுத்தாள். இந்த மாப்பிள்ளையுடன் சற்று தனியாகப்
பேசவேண்டுமென்று. அவளது தந்தைக்கும் அது சரியென்றே
படவும், இருவரும்
தனித்துப் பேச ஏற்பாடுசெய்தார்.
தனியே
பேசவந்த ராமகிருஷ்ணனிடம் நளினி, தான் ரமேஷைக் காதலித்த விவரங்களையும், அதன்பிறகு நடந்த
அனைத்து விஷயங்களையும் விவரமாக கண்ணீருக்கிடையே சொல்லிமுடித்தாள். பொறுமையாக நளினி கூறியவற்றைக் கேட்டுக்
கொண்டிருந்த ராமகிருஷ்ணன்,
“சா¢, இதுதான்
விஷயமா? ஏதோ பொ¢ய விஷயம்
சொல்லத்தான் கூப்பிட்டயாக்கும்னு நினைச்சேன்” என்றான் நிதானமாக.
“ஏங்க, நான் காதலிச்சதும், கல்யாணப்பேச்சுவரை
வந்து கல்யாணம் நின்னு போனதும் பெரிய விஷயமில்லையா என்ன?” என்றாள் தலையைக்
குனிந்தபடியே.
“இல்லை
நளினி, நிச்சயமா
இல்லை. ஒரு ஆணோ பெண்ணோ கல்யாணத்துக்கு
முன்னால் காதலிக்கிறது குற்றமே இல்லை.
தப்பா நடந்துக்காம இருந்திருக்கணும்,
அதுவு மில்லாமல், தான்
காதலித்ததை மறைக்காமல், ஒளிவுமறைவில்லாமல்
சொல்லறது இருக்கே அதுதான் பொ¢ய
விஷயம். நீ பேசும்போது உன்கண்களில் தொ¢ந்த ஏமாற்றமும், அவமான உணர்வும்
உன்னை எவ்வளவு பாதிச்சுடுத்து என்பதை என்னால் பு¡¢ஞ்சுக்க முடிஞ்சுது.
மேலும் நீ அவரை உண்மையாகக் காதலிச்சே என்பதும் என்னால் நன்கு
உணரமுடிந்தது. அப்படி இருந்தும் அந்தக்
காதலை மறந்து என்னை மனப்பூர்வமாகக் கல்யாணம் பண்ணிக்க முன்வந்து என்னிடம் எதுவும்
மறைக்கக் கூடாதுன்னு நினைச்சியே இதெல்லாம் பொ¢ய விஷயமில்லையா? இப்போ என்னை நீ கல்யாணம் பண்ணிக்கறதிலே ஒண்ணும் ஆட்சேபணை
இல்லையே?”
“அப்போ
என்மேலே உங்களுக்கு சந்தேகமோ,
கோபமோ இல்லையா?”
“இல்லை
நளினி, நிச்சயமாக
இல்லை. நீ பழசையெல்லாம் மறந்துட்டு
என்னைக் கல்யாணம் பண்ணிண்டால்,
நான் உன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். இன்னொன்றும் சொல்றேன், நீ எந்தவிதமான
நகைநட்டுக்களும் தேவைக்குமேல் கொண்டு வரவேண்டாம்.
சீர் செனத்தி வரதக்ஷணைன்னு எதுவும்
தேவையில்லை. சிரித்த முகத்துடனும்,
மனம்நிறைய சந்தோஷத்துடனும் நீ என்னுடன் வந்தால் போதும். என் பெற்றோரும்
எதுவும் கேட்கமாட்டார்கள் சரியா?”
என்றவன் அவளைப் பார்த்து சிரித்தான்.
இருவரும்
மீண்டும் அனைவரும் குழுமியிருந்த இடத்திற்கு வந்து அமர்ந்தனர். பிறகு சம்பந்திகள் பரஸ்பரம் பேசி நல்லபடியாக
கல்யாணமும் நடந்தேறியது.
நளினிக்குக்
கல்யாணமாகி, பத்து
வருடங்கள் ஆகியும், நேற்றுதான்
நடந்ததுபோல இருந்தது. சாதாரண
சீர்செனத்திகளோடு புக்கஹம் வந்தவள்,
மிகுந்த சந்தோஷத்துடனே தன் கணவன்,
மாமனார், மாமியார்
குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரமேஷின்
புகைப்படத்தைப் பார்த்தவுடன்,
கடந்தகால நினைவுகள் வந்து அதில் அவள் மூழ்கும்நிலை ஏற்பட்டது. ரமேஷை
மணந்துகொண்டிருந்தால், மிகுந்த
செல்வச்செழிப்பில் திளைத்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவளது தந்தை தன் சொந்த வீட்டையும் விற்று, அவளுக்கும்
கல்யாணம் செய்வித்து, தான், சொல்லொணாத்
துன்பத்தில் வாடிக்கொண்டிருந்திருப்பார். அவளது தம்பிகளும் சா¢யாக
படிக்கமுடிந்திருக்காது. அவர்களது
எதிர்காலமே பாழாகிப் போயிருக்கும். ஆனால்
அவள் ராமகிருஷணனை மணமுடித்தாள்,
அவளது குடும்பத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. நளினியும் சந்தோஷமாக வாழ்ந்து
கொண்டிருக்கிறாள். இந்த நினைப்பே அவளுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும்
கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இரண்டு
வாரங்கள் ஓடிவிட்டன அன்று
ஞாயிற்றுக்கிழமை. காய்கறிகள் வாங்கி வரலாம்
என்று நளினி மார்க்கெட்டுக்குச் சென்றாள்.
காய்கனிகள் வாங்கவேண்டியவைகளை வாங்கிக்கொண்டு, தனது ஸ்கூட்டியில்
அவைகளை வைத்துவிட்டுத் திரும்பியவள்,
அவளது ஸ்கூட்டி நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு சற்று முன்னால் ஒரு இண்டிகா
கார் நிறுத்தப்பட்டிருந்ததும்,
அதன் கதவைத்திறந்த ஒரு நபர்,
கா¡¢ன் கதவைத்
திறந்து வைத்துக் கொண்டு தன்னையே பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருப்பதையும்
கவனித்த நளினி, அந்த நபரை
தான் எங்கோ பார்த்திருப்பது போலவும்,
தான் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியது போலவும் உணரவே, அவரை சற்று உற்று
நோக்கினாள். அந்த நபரும் அவளைப் பார்த்து புன்னகைத்து, தனது கா¡¢ன் கதவைச்
சாத்திவிட்டு அவளை நோக்கி வந்தார். அவர் அவளை நெருங்கி வந்தபின்னர்தான் அந்த நபர்
தனது பாழய காதலன் ரமேஷ் என்பது அவளுக்கு விளங்கியது. சட்டென்று அடையாளம் பு¡¢யாத அளவிற்கு
ரமேஷின் உருவம் மாறியிருந்தது. தலையில் வழுக்கை விழுந்து முடியெல்லாம் நரைத்து, உடலில் சற்று
பருமன் தூக்க, நல்ல
களையான முகம் சுறுங்கி அதுதான் ரமேஷ் என்று அடையாளம் கண்டுபிடிப்பதே சற்று சிரமமாகத்தான்
இருந்தது அவளுக்கு.
“என்ன
நளினி சௌக்யமா இருக்கியா? உங்கப்பா, அம்மா, தம்பிகள், கணவர் எல்லோரும் சௌக்யமா
இருக்காங்களா?¡ என்று
கேட்டபடி ரமேஷ் அவளருகில் வந்தான்.
“அட., ரமேஷா! என்னங்க
இப்படி ஆகிட்டீங்க? ஆள் அடையாளமே தெரியல்லியே” என்றாள் நளினி ஆச்சர்யத்துடன். அவன் சிரித்தான். அந்த சிரிப்பில் வேதனை கலந்திருந்தது நன்கு தெரிந்தது.
“ஏன் ரமேஷ சிரிக்கிறீங்க?
நல்ல வசதியான கோடீஸ்வரர் நீங்க! உங்க
மனைவியும் உங்க அந்தஸ்த்துக்கேத்த கோடீஸ்வர இடத்திலிருந்து வந்திருப்பாங்க.
நிச்சயமா நீங்க ரொம்ப சந்தோஷமாத்தான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்திருக்கணும். சா¢தானே ரமேஷ்?” என்றாள் நளினி.
“ஹ்ம்..ம்..ம்..ஆ..ஆஆஆமாம்
இருக்கேன். நீ எப்படி இருக்கே நளினி?
உன்னைப் பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கிறதாத்தான் தெரியறது.”
“ஆமாம்
ரமேஷ், ரொம்ப
சந்தோஷமாத்தான் இருக்கேன். ரொம்ப,
ரொம்ப ரொம்ப. உங்களை மாதிரி
இல்லை என் கணவர். ரொம்ப நல்லவர். உள்ளொன்று வைத்து மேலே அன்பா இருக்கறமாதி¡¢யெல்லாம்
அவருக்குப் பழகத்தொ¢யாது. ஆனால்,
நான்தான் ரொம்ப மோசம். கல்யாணம்
ஆனதுக்கப்புறம் உங்களை மறக்கமுடியாமல் எப்படித் தவிச்சேன் தெரியுமா? உங்க நினைப்பை
மறக்க ரொம்ப நாளாச்சு. அந்த நினைப்பை
மறக்கடிச்சதே என் கணவரோட அன்பும் பாசமும்தான்.
அவர் ரொம்ப நல்லவர். பணத்தாசை பிடிச்சவர் இல்லை. என் மாமனாரும் மாமியாரும்கூட ரொம்ப ரொம்ப நல்லவங்க. என்மேலே
ரொம்ப ஆசையும் அன்புமா பாசத்தோட இருக்காங்க.
சீர் செனத்தி ஒண்ணுமே கேட்கல்லே.
எங்கப்பாவாலே என்ன செய்யமுடியுமோ அவ்வளவுதான் செஞ்சார். அதை அவர்கள் சந்தோஷமா ஒத்துண்டாங்க. ஏத்துண்டாங்க. என் கணவர் என் தம்பிகள் படிப்புக்குக் கூட
உதவியெல்லாம் செஞ்சார். எனக்கு ஒரு
ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்திருக்கார்.
இப்போதான் புதுசா ஒரு கார் வாங்கியிருக்கார். இப்போ நாங்க இருக்கறதும்
சொந்த வீட்லதான். எல்லாமே கடன்வாங்கி, அடைச்சு
சந்தோஷமாத்தான் இருக்கோம்.” படபடவென்று பேசினாள் நளினி மடைதிறந்த வெள்ளம்போல.
ரமேஷின்
முகத்தில் ஈயாடவில்லை. அவன்
தலைகுனிந்தபடியே அவள் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தான்.
“என்ன
ரமேஷ், நான் பேசிண்டே இருக்கேன், நீங்க தலைகுனிஞ்சுண்டே இருக்கீங்க.” என்று அவனை
மறுபடியும் சீண்டினாள் நளினி. அவன் தனது
தலையைத் தூக்கி அவளைப் பா¢தாபமாகப்
பார்த்தான். அவனது கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது.
“நளினி, நான் உன்னைக்
காதலிச்சது உண்மை. இன்னிவரைக்கும் உன்னை
மறக்க முடியாமல் தவிப்பதும் உண்மை. ஆனால்
நான் வாழ்கையிலே சந்தோஷமா இல்லைங்கறதும் உண்மை.
என் மனைவி நிறைய நகைகளோடும்,
சீர்செனத்தியோடும் வந்தவள்தான். அவளது
பெற்றோர் குடும்பத்திலும் சா¢,
எங்கள் குடும்பத்திலும் சரி
செல்வத்திற்கோ, வசதிக்கோ
எந்தவிதக் குறைச்சலுமில்லை. ஆனால்
எனக்குமட்டும் சந்தோஷமே இல்லை.”
“நீங்க
அப்படிப்பட்ட செல்வச்செழிப்பைத்தானே எதிர்பார்த்தீங்க?
அதுலதானே சந்தோஷம் இருக்கிறதாச் சொன்னீங்க; அதனாலதானே என்னை போனாப்போறதுன்னு வைப்பா வைச்சுக்கறதாவும்
சொன்னீங்களே ஞாபகம் இருக்கா. இப்போவந்து,
எல்லா வசதிகளிருந்தும் ஆசைப்பட்டமாதிரி மனைவி அமைஞ்சும் சந்தோஷம் இல்லைங்கறீங்களே?! இது என்ன நியாயம்
ரமேஷ்?” ரமேஷ்
சிறிதுநேரம் பதிலேதும் சொல்லாமல் நளினியின் முகத்தையே பார்த்துக் கொண்டு
நின்றிருந்தான் பிறகு வருத்தம் தோய்ந்த குரலில் அவளுக்குப் பதில் சொன்னான்.
“நளினி, என்னை
மன்னிச்சுடு. நான் உன்னை உயிருக்குயிராய்
காதலிச்சதோ, இன்னிவரையிலும்
உன்னை மறக்கமுடியாமல் தவிச்சுண்டு இருக்கறதோ சத்தியம். அன்னிக்கு அப்படியெல்லாம்
உன்னிடம் பேசியதெல்லாம் உண்மையில்லை,
எல்லாமே பொய்தான். என் மனச்சாட்சிக்கு மாறாகத்தான் நான் அப்படி
பேசநேர்ந்தது. நான் பொறந்ததிலேர்ந்து
செல்வச்செழிப்பிலேயே வளர்ந்தேன். நல்ல வேலை பார்த்தாலும், அந்த வருமானம்
நாம் குடும்பம் நடத்தப் போறாதுன்னு நன்னாப் புரிஞ்சுண்டேன். இருந்தாலும் என் அப்பாகிட்டே எவ்வளவோ
சொல்லிப்பார்த்தேன். அவர் பிடிவாதமாகவே இருந்தார். அவருக்கு வரும் மருமகளின் குணம்
நடவடிக்கையெல்லாத்தையும் விட செல்வமும் அந்தஸ்த்தும்தான் ரொம்ப முக்கியமாகப்
பட்டது.. என் விருப்பம்போல உன்னைக் கல்யாணம் பண்ணிண்டா அவரோட சொத்தோ, ஆதரவோ துளிக்கூடக்
கிடைக்காதுன்னு கண்டிப்பா சொல்லிட்டார்.
நான் எவ்வளவோ பிடிவாதம் பிடிச்சும் எதுவும் என் இஷ்டம்போல நடக்கல்லை. அதனாலதான் நீயாவது உன் பெற்றோர் சொல்றபடி
கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா வாழட்டுமேன்னுதான், என் மனசைக் கல்லாக்கிண்டு அன்னிக்கு அப்படியெல்லாம்
பேசினேன். இப்போ நான் நினைச்சபடி நீ
சந்தோஷமா வாழ்ந்துண்டிருக்கே.”
அவன் மிகவும் உறுக்கமாகப் பேசினான்.
நளினிக்கு
என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவனைப் பார்த்தாள். அவள் பார்வையில் பா¢தாபமோ, ஏமாற்றமோ, கோபமோ தொ¢யவில்லை.
ரமேஷ்தான் பேசினான்.
“நளினி, நீ என்னை அப்படிப்
பார்க்காதே; நான்தான்
தப்பு பண்ணிட்டேன். ஏன்னா, என் மனசுலே
உறுதியில்லை. தன்னம்பிக்கையில்லை. என்னோட
அப்பா சொத்துக்கள்தான் பெரிசாத் தெரிஞ்சது.
ஆனால் எனக்குக் கிடைச்ச மனைவி,
உன்னைப் போல அன்பா, ஆசையா,
ஆதரவா, அடக்கமானவளாயில்லை. பணக்காரத்திமிர் அதிகம் உள்ளவள். நான் தான் அவளை அனுசரிச்சுண்டு போகணும். என்
அப்பா அவளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்கார். என் வாழ்கைல சந்தோஷமே இல்லை. சந்தோஷமா
இருக்கறதுபோல வேஷம் போட்டிண்டிருக்கேன்.
“ஆனால்
நளினி, இதுதான் யதார்த்தம். ஒருத்தனையோ, ஒருத்தியையோ
கண்டவுடன் ஏதோ ஒண்ணாலே மனசு கவரப்பட்டு காதலாய் மாறிடும்.. அப்போ பணம், காசு, அந்தஸ்த்து, குலம், கோத்திரம் ஒண்ணுமே
புரியாது. அது ஒரு பைத்தியம் போலவே ஆட்சி
செய்யும். ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் பிரியமாட்டோம்னு சத்தியமெல்லாம் பண்ண
வைக்கும். ஆனால் நிச்சயமா யதார்த்தம்னு
ஒண்ணு இருக்கு. அதைப் பார்க்காம அலட்சியம்
பண்ணிட்டு, நம்ம
மனசுதான் பெரிசு, காதல்தான்
பெரிசுன்னு நினைச்சு நம்ம இஷ்டம்போல நடந்துண்டோம்னா,சாதாரண வாழ்கைகூட வாழமுடியாது. குடும்ப அமைப்பே கெட்டுப்போகும். சொந்தங்கள்
நிலைக்காது. அதுக்காக காதலே வேண்டாம்னு
சொல்ல வரல்லை. காதலுக்குக் கண்ணில்லைன்னு
சொல்றதெல்லாம் சுத்தப்பேத்தல். காதலுக்குக் கண் இருக்கோ இல்லையோ, காதலிக்கறவாளுக்கு, கண்,காது, மூக்கு எல்லாம்
இருக்கு. சட்டுன்னு ஒரு உடனடி உணர்ச்சிக்கு ஆட்படாமல் சற்று யோசிச்சுப் பார்த்து,எல்லாத்தையும்
அலசிப்பார்த்து, அணுகிப்பார்த்து
காதலிக்கறதுதான் நல்லது. அப்படியெல்லாம்
முடியாதுன்னு சொல்லலாம். ஆனால் அப்படி
செய்யறதுதான் சரி.
“கல்யாணம்னு
வரும்போது ஜாதி, அந்தஸ்த்து, குலம்,கோத்திரம் எல்லாம்
எதிரில் வந்து நிற்கும், கூத்தாடும். அப்போதான் நாம் விழிச்சுக்கறோம். சேரவும் முடியாமல், விலகவும்
முடியாமல் தவிக்கிறோம். துணிஞ்சு
போராடலாம்கிற ¨தைரியமும்
வரதில்லை. அப்படித் துணிஞ்சு செயல்பட்டாலும் அதற்கு சரியான மரியாதையும்
கிடைக்கிறதில்லை. முன்னாடியே நாம் கொஞ்சம் விழிப்போட இருந்து, முன்கூட்டியே
எல்லாத்தையும் அனுசரிச்சு, ஆராஞ்சு காதலிக்க ஆரம்பிச்சிருந்தா பின்னாலே ஏமாத்தமும்
வருத்தமும் வர சாத்தியமே இல்லை.
“எப்படியும்
பிடிவாதமா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிண்டிருந்தால் என் அப்பா அம்மா உன்னை
ஏத்துண்டிருக்க மாட்டா. எப்போ
பார்த்தாலும் டார்ச்சர்தான். குத்திப் பேசுவது, இழிவாப்பேசறதுன்னு பேசிப்பேசியே நம்மைக் கொன்னுடுவாங்க.
அவங்க சங்காத்தமே வேண்டாம்னு நாம் தனியாப் போனாலோ,என்னாலே என் வருமானத்துல குடும்பம் நடத்தத் தெரியாது. பணக்காரத்தோதுலேயே நான் சின்ன வயசிலேர்ந்து
வளர்ந்ததினாலே சிக்கனமாவோ,
படாடோபமில்லாமல் வருகிற வருமானத்தில குடும்பம் நடத்தற யோக்கியதையும்
எனக்கில்லைங்கறதும் எனக்கு நன்னாவே தெரியும்.
இதெல்லாத்தையும் நான் நன்னா யோசிச்சு முடிவுபண்ணித்தான், அன்னிக்கு அப்படி
உன்கிட்டே நான் என் மனசைக் கல்லாக்கிண்டு பேசினேன். அப்போவே எனக்கு நன்னாத்தெரியும், உன்வசதிப்படி நீ
கல்யாணம் பண்ணிண்டா சந்தோஷமா இருப்பே;
ஆனால் எனக்கு எந்தவிதமான சந்தோஷமும் கிடைக்காதுன்னு. அதனாலதான் அன்னிக்கு நான்
அப்படிச் செஞ்சேன். உன்னையும் தப்பாப் பேசினேன். அப்போதான் நீ என்னை மறந்து வேற
நல்லவனா உன் அப்பா சொல்படி கல்யாணம் பண்ணிப்பேன்னு பேசினேன். என்னை மன்னிச்சுடு நளினி. என்னிக்காவது நான் உன்னைப் பார்ப்பேன், என் மனசுல
இருக்கிறதைக் கொட்டுவேன்னு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துண்டு இருந்தேன். இன்னிக்கு
என் மனசைத் திறந்துட்டேன். என்னை மன்னிச்சுடு நளினி. அன்னிக்கு உன் மனசை ரொம்ப
நான் நோகடிச்சுட்டேன். அதுக்குத்தான் இந்த மன்னிப்பு.
“எதையும்
ஏத்துண்டு எதிர் நீச்சல் அடிச்சு வாழ்க்கைல முன்னுக்கு வர துடிக்கிறவன்தான்
காதலிக்கணும், இல்லைன்னா
யதார்த்தமா விட்டுக் கொடுத்து மத்தவாளை வாழ வைக்கணும் இது தான் காதல் ஒருத்தர்
மேல் ஒருத்தர் வச்சிருக்கிற அன்பு,
மா¢யாதை
பாசம் எக்ஸட்ரா, எக்ஸட்ரா.” பேசி நிறுத்தினான்
ரமேஷ்.
நளினியின்
கண்களிலே நீர் வழிந்தது. ``ஐயாம் ஸாரி ரமேஷ் உங்களைத்
தப்பா புரிஞ்சுண்டேன். இப்போ எல்லாமே நன்னா புரிஞ்சுடுத்து காதல்,கீதல்ன்னு இன்·பார்சுவேஷனால
பழகறது பைத்தியக்காரத்தனம்கிறது இப்போ நன்னா புரிஞ்சு போச்சு. ஆனால் இதெல்லாம்
இப்போ புரிஞ்சு என்ன பிரயோஜனம் உங்க வாழ்க்கை முறை வேற, என் வாழ்க்கை முறை
வேற. காதலிக்கறவங்க ஒவ்வொருவரும் சரியா,
அலசி ஆராய்ஞ்சு தன் காதலை தங்கள் பெற்றோ¡¢டம்
சொல்லி யதார்த்தமா யோசிச்சுக் காதலிச்சா வாழ்க்கை பிரகாசமா இருக்கும்கிறது மிகவும்
நிதர்சனமான உண்மை ரமேஷ். நான் நாம் பழகிய காலங்களை மறக்கமுடியாவிட்டாலும்
சந்தோஷமாக வாழறேன். நீங்களும் உங்க மனைவியை அனுசரிச்சு சந்தோஷமா வாழணும்.
யதார்த்தத்தை உணர்ந்திட்டீங்க,
இனிமே மனசுல குற்ற உணர்ச்சி இல்லாம இருக்கிற வாழ்க்கையை சந்தோஷமா வாழ முயற்சி
பண்ணுங்க எல்லோருக்கும், எல்லாமே எப்பவுமே
அவங்கவங்க நினைக்கிறபடி கிடைக்காதுங்கறதைப் புரிஞ்சுக்கணும். கிடைச்சதை வெச்சுண்டு
சந்தோஷமா வாழ பழகிக்கணும். வாழ்கைங்கறது சந்தோஷமா வாழறதுக்குத்தானே தவிர, தினம் தினம்
கடந்ததை நினைத்து வருத்தப்பட்டுண்டு மனம் புழுங்கிண்டே வாழறதுக்கு இல்லை/ங்கறதை புரிஞ்சுக்கணும். இதுதான் ரமேஷ் யதார்த்தம். நாழியாயிடுத்து நான்
வர்றேன். என் மாமனார் மாமியாருக்குக் காபி
போட்டுக் கொடுக்கணும், நான்
வர்றேன். பை..பை..” என்று
சொல்லியபடி தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து அதில் ஏறி பறந்தாள். அவள் செல்வதையே
பார்த்துக்கொண்டு நின்ற ரமேஷின் உதடும் “நளினி
ரொம்ப நல்லவள், அவளாவது
யதார்த்தத்தைப் புரிஞ்சுண்டு நன்னா வாழட்டும்.” என்று முணுமுணுத்தன.
************
.
கருத்துகள்
கருத்துரையிடுக